ஹனிமூன் போன இடத்தில் இந்திய வம்சாவளி பெண் மீது சீனர் தாக்குதல்? - தாடை தெறித்து கொட்டிய பல்
இந்திய வம்சாவளி பெண் மீது சீனர் தாக்குதல்?
இந்திய வம்சாவளி பெண் தேனிலவின் போது சீனர் ஒருவரால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தம்பதியான நிகிதா மற்றும் கரண், தேனிலவுக்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர்... அப்போது ஹோட்டலில் ஒரு சீனரால் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், இதனால் நிகிதாவின் 12 பற்கள் சேதமானதாகவும், தாடையில் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... ஆனால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் இதனை மறுத்துள்ளது. அந்த தம்பதி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், ஊழியர்களின் சம்மதமின்றி பதிவு செய்ததாகவும், 60 வயது ஊழியரைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது... தற்காப்புக்காக மட்டுமே ஊழியர் செயல்பட்டதாகவும், தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்... காவல்துறையினர் இருதரப்பு குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வருகின்றனர்.
