சில்லென்ற செப்டம்பர் - கொட்டி தீர்த்த கனமழை - குளிர்ச்சியில் மக்கள்-குழப்பத்தில் வாகன ஓட்டிகள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேட்டுமலை, வீரபாண்டியபுரம், அமீர்பாளையம், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடியது. இருப்பினும், குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story