குழந்தை உயிரிழப்பு - ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்

x

குழந்தை உயிரிழப்பு - ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்....சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த விவகாரம். அரசுப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்

சேலம் சங்ககிரி அருகே அரசு பேருந்தில் பயணம் செய்தபோது ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர் நடத்துனர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.....

தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளி கரங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை,முத்துலட்சுமி தம்பதியினருக்கு ஏழு வயது பெண் குழந்தையும், 9 மாத நவனீஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது குடும்பத்தினருடன் உறவினரின் இறப்பிற்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கோவை செல்வதற்காக சேலத்திலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் ராஜதுரை மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் தனது இருகுழந்தைகளுடன் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளனர்.

அப்போது சுமார் இரவு 10 மணி அளவில் சேலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்தின் முன் பக்க கதவு திறந்து இருந்ததால் கதவை சாத்தி வைக்க நடத்துனரிடம் ராஜதுரை தெரிவித்தும் நடத்துனர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கத்தேரி வளையக்காரனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் ராஜதுரை இடது தோளில் இருந்த அவரது மகன் நவனீஸ் நழுவி கீழே விழுந்து திறந்து வைக்கப்பட்டிருந்த படிக்கட்டு வழியாக பேருந்தை விட்டு சாலையில் விழுந்து குழந்தை இறந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்திலிருந்து குழந்தை விழுந்ததற்கான காரணம் குறித்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அரசு பேருந்து இயக்கி வந்த ஓட்டுநர் சிவன்மணி மற்றும் நடத்துனர் பழனிச்சாமி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்