கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் - கல்வி செலவை தமிழக அரசே ஏற்க முடிவு?

டெல்லி, கேரளாவை தொடர்ந்து, தமிழகத்திலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் - கல்வி செலவை தமிழக அரசே ஏற்க முடிவு?
Published on

டெல்லி, கேரளாவை தொடர்ந்து, தமிழகத்திலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், தந்தை மற்றும் தாயை இழந்த சிறுவர்கள் பலர் ஆதரவற்ற நிலையில் நிர்கதியாக உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில், மாதம் தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவியுடன், அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அதே போன்று, கேரளாவிலும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் மாணவர்களின் கல்வி செலவை ஏற்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்திலும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை அரசு சேகரித்துள்ளது. அதன்படி, இந்த குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்பதுடன், குறிப்பிட்ட தொகையை வங்கியில் முதலீடு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com