சங்கிலி டாலரை விழுங்கிய குழந்தை, வயிற்றிலிருந்து டாலர் பாதுகாப்பாக அகற்றம்

சேலத்தில் சங்கிலி டாலரை விழுங்கிய குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளித்து அதன் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் அகற்றினர்.
சங்கிலி டாலரை விழுங்கிய குழந்தை, வயிற்றிலிருந்து டாலர் பாதுகாப்பாக அகற்றம்
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் 2 வயது பெண் குழந்தை கழுத்தில் அணியும் சங்கிலியில் இருந்த டாலரை விழுங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். எக்ஸ் -ரே எடுத்து பார்த்ததில் குழந்தையின் வயிற்றில் இரப்பை பகுதியில் டாலர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. என்டோஸ்கோபி கருவி மூலம் குழந்தையின் வயிற்றில் ஆபத்தான முறையில் இருந்த டாலரை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com