வறுமை காரணமாக குழந்தையை விற்ற தம்பதி - தரகர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார்

வறுமை காரணமாக பிறந்து 20 நாட்களேஆன பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமை காரணமாக குழந்தையை விற்ற தம்பதி - தரகர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார்
Published on

பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல். மாற்றுத்திறனாளி. இவரின் மனைவி சுதா. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே வறுமையில் இருந்த அவர்களுக்கு 4வது குழந்தையை வளர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை விற்றுவிட அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து குழந்தையை விற்கும் தங்களின் திட்டத்தை பெளலினா என்ற பெண்ணிடம் கூறியுள்ளார் முருகவேல்.

கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் - கோகிலா தம்பதியருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததை அறிந்த பெளலினா, தரகராக மாறி குழந்தையை அவர்களிடம் விற்றுள்ளார். இதற்காக 80 ஆயிரம் ரூபாய் பணமும் கைமாறியுள்ளது.

இந்த தகவல் கோவை குழந்தைகள் நல அலுவலகத்தின் கவனத்திற்கு செல்லவே, விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து குழந்தையை போலீசார் மீட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com