Child Safety | சகோதரிகள் பலாத்காரம் - காமுகன் இயற்கையாக சாகும் வரை.. கோர்ட் தரமான தீர்ப்பு
சகோதரிகள் பலாத்காரம் - காமுகன் இயற்கையாக சாகும் வரை.. கோர்ட் தரமான தீர்ப்பு
சகோதரிகள் இருவர் பலாத்காரம் - காமுகன் இயற்கையாக சாகும் வரை.. கோர்ட் கொடுத்த தரமான தீர்ப்பு #childsafety #villupuramnews விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மற்றும் அவரது 25 வயது சகோதரியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கன்னியப்பன் என்பவருக்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில், கன்னியப்பன் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு இரு ஆயுள் தண்டனைகளுடன், மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
