மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அக்குடியிருப்பில் பணியாற்றிய ரவிகுமார், சுரேஷ், ராஜசேகர், அபிஷேக், சுகுமாரன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கான தண்டனை இன்று அறிக்கப்பட்டது.

அதன்படி 3 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 9 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com