பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை

பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை
பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை
Published on

சென்னை அயனாவரம் பள்ளி சிறுமி பலாத்கார வழக்கில் தொடர்புடைய 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது..இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் அயனாவரம் மகளிர் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இவர்களில் பாபு என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மற்ற 16 பேருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை, இரத்தப்பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. இதுதொடர்பான அறிக்கை ஓரிரு நாட்களில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com