மதுரை செல்லூரை சேர்ந்த லாரி ஓட்டுனர் ராபர்ட் என்பவரின் இரண்டாவது மனைவி மேரிக்கு பிறந்த 9 மாத ஆண் குழந்தையை , வெளிநாட்டில் பணியாற்றும் ஷாஜகான்- நாகூர் அம்மாள் தம்பதிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக இடைத்தரகர் மூலம் அதிக பணம் கொடுத்ததாகவும், பின்னாளில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக 20 ரூபாய் பத்திரத்தில் இருதரப்பினரும் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டதாகவும் தெரிகிறது. தகவலறிந்த சைல்ட் லைன் அமைப்பினர் போலீசார் உதவியோடு சென்று நேரடியாக விசாரணை நடத்தியதில் குழந்தை விற்கப்பட்டது உறுதியானது.
அந்த குழந்தையை மீட்டு கருமாத்தூரில் உள்ள காப்பாகத்தில் பாதுகாக்க சைல்ட் லைன் அமைப்பினர் அறிவுறுத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக நாகூர் அம்மாள், ராபர்ட்,மேரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.