Poovai Jaganmoorthy | ADGP Jayaram | சிறுவன் கடத்தல் வழக்கு... 20 மணி நேரம் தொடர் விசாரணை..
சிறுவன் கடத்தல் வழக்கில், ஏடிஜிபி ஜெயராம், ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்பவர், விஜயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்த நிலையில், தனுஷின் சகோதரரை கடத்தியதாக புகார் எழுந்தது.
இதற்கு உடந்தையாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மற்றும் எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி மீது புகார் எழுந்தது. கடத்தலுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தியதற்காக, நீதிபதி உத்தரவின்பேரில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில், அவரை திருவாலாங்காடு காவல் நிலையத்தில் வைத்து 20 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மீண்டும் சம்மன் அளித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதேபோல, ஜெகன் மூர்த்தியையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
