நள்ளிரவில் 5 மாத குழந்தையை கடத்த முயற்சி - இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கைது

தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத குழந்தையை நள்ளிரவில் கடத்த முயன்ற சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நள்ளிரவில் 5 மாத குழந்தையை கடத்த முயற்சி - இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கைது
Published on
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோளிங்கர் ரயில் நிலைய வளாகத்தில், தண்டவாள பணிகளுக்காக ஆந்திராவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் துா்காபிரசாத் என்பவரின் 5 மாத குழந்தை ரிஷிகவந்தாவை மர்ம நபர் ஒருவர் தூக்கி உள்ளார். அப்போது குழந்தை அழுததால், அவரது மனைவி எழுந்ததும் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து மர்ம நபரை துரத்திச் சென்ற தொழிலாளர்கள், புதருக்குள் பதுங்கிய அவரை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து அடித்ததுடன், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், குழந்தையை கடத்த முயன்றவர் அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்த தினேஷ் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார்,காட்பாடி ரயில்வே காவல் நிலையம் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com