மாயமான குழந்தை, கிடைத்த‌து...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?

பழனியில் சாலையோரம் வசித்து வந்த நடைபாதை வியாபாரியின் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் திரும்ப விட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையோர வியாபாரிகளில் ஒருவரான ஷாநவாஸ் என்பவரின் 5 வயது குழந்தை கடந்த 6 நாட்களுக்கு முன் மாயமானது. இதனால் வேதனையடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்த‌துடன் பல இடங்களில் தேடி திரிந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், குழந்தையை ஷாநவாஸ் தங்கியிருந்த சாலையோரம் விட்டுச் சென்றுள்ளனர். தங்களை போலீசார் தேடுகின்றனர் என்பதால் அச்சமடைந்த கடத்தல் கார‌ர்கள் குழந்தைகளை விட்டுச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. குழந்தை திரும்ப கிடைத்த‌தால் மகிழ்ச்சியடைந்துள்ள தாய் சித்திரா, கடத்தல்கார‌ர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com