சிறுமியின் உயிரை பறித்த ஊஞ்சல்

வீட்டில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது, கயிறு கழுத்தில் இறுக்கி, பள்ளி மாணவி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் உயிரை பறித்த ஊஞ்சல்
Published on

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காட்டை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் பிரியதர்ஷினி. 5ஆம் வகுப்பு படித்து வந்த இவர் , கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கயிறு பிரியதர்ஷினியின் கழுத்தை இறுக்கியதால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது பெற்றோர், பிரியதர்ஷினியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்தார். ஊஞ்சல் கட்டி விளையாடிய மகளின் உயிர் போனதை அறிந்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com