கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலி - சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது விபரீதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நான்கு வயது கனிஷ் மற்றும் 11 வயது சிறுவன் சுமந்த் விளையாடி கொண்டிருந்த போது, சிறுவன் கனிஷ், 70 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலி - சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது விபரீதம்
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நான்கு வயது கனிஷ் மற்றும் 11 வயது சிறுவன் சுமந்த் விளையாடி கொண்டிருந்த போது, சிறுவன் கனிஷ், 70 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட சிறுவன் சுமந்த், கிணற்றுக்குள் குதித்து சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் கனிஷ் தண்ணீருக்குள் மூழ்கியதால் சுமந்த் கத்தி கூச்சலிட்டு உள்ளார். உடனே அக்கம் பக்கத்திலிருந்து வந்த உறவினர்கள், சுமந்தை மீட்டு, கனிஷை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் கிணற்றில் 40 அடி வரைக்கும் தண்ணீர் இருந்ததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 3 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து சிறுவன் கனிஷின் உடலை சடலமாக மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com