15 வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை பக்கெட்டில் மரணம் - பெற்றோர்களே உஷார்

x

ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி உயிரிழப்பு

ராமேஸ்வரம் அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அடுத்த புதுரோடு பகுதியைச் சேர்ந்த கணேசன் - ஜெயந்தி தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 15 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாமல் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 15 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்ததையடுத்து, அந்தக் குழந்தைக்கு முதல் பிறந்த நாளையும் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். இந்த சூழலில் கணேசன் -ஜெயந்தி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டிலிருந்தவர்கள் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றிருந்த நிலையில், குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை எதிர்பாராத விதமாக தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்