16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 21 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தாராபுரம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், 21 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 21 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
Published on
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் கடந்த 16ஆம் தேதி தமது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், காணாமல் போன சிறுமி, மேட்டுக்கடை தும்பல்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவருடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இருவரையும் மீட்ட போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, கொத்தனார் வேலை செய்து வரும் சூர்யா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
X

Thanthi TV
www.thanthitv.com