தமிழக மக்களிடம் முதல்வர் வேண்டுகோள்
"உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் - முதல்வர் வேண்டுகோள்
தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் குறைகளை தீர்க்க அரசு அலுவலர்கள், மக்களின் இல்லத்திற்கே வந்து மனுக்களை பெற்று, அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் நடைபெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முகாம்களில், ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட இருப்பதால்,பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story
