பொறியியல், மருத்துவம் நல்ல படிப்பு தான் என்றாலும் மாணவர்கள் அந்த கனவோடு மட்டும் நின்றுவிடக் கூடாது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மாணவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
x


சாதி, மதம், பணம், அதிகாரம், அனுபவம் உள்ளிட்ட அளவுகோலை கடந்து நிற்பது அறிவு மட்டும் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், பொறியியல், மருத்துவம் நல்ல படிப்பு தான் என்றாலும் மாணவர்கள் அந்த கனவோடு மட்டும் நின்றுவிடக் கூடாது என்றார். எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், பள்ளிகல்வி, உயர்கல்வி எதுவாக இருந்தாலும் திறமை, அறிவுசார் கல்வியாக மாற்றிக் காட்டுகிறது தமிழக அரசு என பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்