நாளை தமிழகம் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்

x

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமை சென்னை திரும்புகிறார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார்.

அங்கு முன்னணி தொழிலதிபர்களை சந்தித்த முதலமைச்சர், பெரியார் படத்திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்....

ஜெர்மனியில் முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தின்போது 7 ஆயிரத்து 20 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாக, 26 நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இங்கிலாந்தில் 8 ஆயிரத்து 496 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மொத்தமாக 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் தொழில் முதலீட்டிற்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்மூலம் 17 ஆயிரத்து 613 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.....


Next Story

மேலும் செய்திகள்