இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

x

சென்னையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் உள்ளிட்ட17 சிறப்பு மருத்துவத் துறை நிபுணர்களின் ஆலோசனையோடு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவும், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும் முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்