முத்துராமலிங்க தேவர் குருபூஜை - பசும்பொன் செல்கிறார் முதல்வர்

x

முத்துராமலிங்க தேவர் குருபூஜை - பசும்பொன் செல்கிறார் முதல்வர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு,

வரும் 29ஆம் தேதி மதுரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், 30ஆம் தேதி காலை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர்

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து சாலை மார்க்கமாக கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு

செல்லும் அவர், அங்குள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ்,

ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களும் முதல்வருடன் செல்ல உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்