சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார். ஊக்கத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த பாஸ்கரன் இன்னும் பல பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.