

ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர், அரசுமுறை பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம், லண்டனில் உள்ள புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாக கூறினார். அரசின் கொள்கைகள், திட்டங்களுக்காக, விருது மழை பொழிந்து வருவதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டு, தற்போது ஒன்றரை லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக கூறினார். விரைவில் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.