பசுமாட்டிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து , அதன் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிய மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டால், மண்ணிற்கு மட்டுமின்றி, வாய்ப்பேச முடியாத உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த நிகழ்வு எடுத்துக்காட்டு என முதலமைச்சர் தெரிவித்தார். மருத்துவர்களுக்கு முதலமைச்சர் நன்றி பாராட்டிய நிகழ்வில், கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.