Chidambaram | Student | செல்போனே கதி என இருந்த மாணவர்! பெற்றோர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

x

செல்போன் மோகம்-பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய மாணவர்

சிதம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் செல்போனுக்கு அடிமையானதால் பெற்றோர் கண்டித்த நிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மெய்க்காவல் தெருவில் வசித்து வருபம் குமார் - சங்கீதா தம்பதியரின் 19 வயது மகன் விஷ்வா, கல்லூரியில் பட்டய படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், படிப்பில் கவனம் செலுத்தாமல் முழு நேரமும் செல்போனில் மூழ்கியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து வீட்டைவிட்டு விஷ்யா வெளியேறியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அதுகு​றி​த்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்