இரு பைனான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் இருவர் கூட்டாளிகளுடன் கைது

சிதம்பரத்தில் இரு பைனான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ரவுடிகள் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இரு பைனான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் இருவர் கூட்டாளிகளுடன் கைது
Published on
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இரு பைனான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ரவுடிகள் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் ரவுடி சுரேந்தர் மற்றும் முக்கூட்டு முருகன் தங்கள் கூட்டாளிகளுடன் பொதுமக்களிடம் நகை மற்றும் பணத்தை கத்தி முனையில் பறித்து வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள போலீசார், சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com