Chidambaram Protest | வண்டல் மண் எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்? | ரோட்டில் குதித்த விவசாயிகள்

வண்டல் மண் எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்? | ரோட்டில் குதித்த விவசாயிகள்

Chidambaram Protest | வண்டல் மண் எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்? | ரோட்டில் குதித்த விவசாயிகள்

வண்டல் மண் எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்? இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு சிதம்பரம் அருகே உரிய ஆவணங்களுடன் வண்டல் மண் எடுத்துச் சென்ற 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவணங்களை சரிபார்த்த வருவாய்த்துறை அதிகாரிகள் வாகனங்களை விடுவிக்க கூறியபோதும், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் இளவரசன் தாமதப்படுத்தியதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், வண்டல் மண் எடுக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். பின்னர் உரிய கடிதம் கிடைத்ததை தொடர்ந்து 3 டிராக்டர்களும் விடுவிக்கப்பட்டன. இதனிடையே, ஆய்வாளர் பணம் கேட்பதாக கூறப்படும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com