சிதம்பரம் : இறால் பண்ணை கழிவுகளால் ஆபத்து... நிலத்தடி நீர் உப்பாக மாறிய அவலம்

சிதம்பரம் அருகே இறால் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், நிலத்தடி நீர் உப்பாக மாறியதோடு, சதுப்பு நில காடுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிதம்பரம் : இறால் பண்ணை கழிவுகளால் ஆபத்து... நிலத்தடி நீர் உப்பாக மாறிய அவலம்
Published on

சிதம்பரம் அருகே இறால் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், நிலத்தடி நீர் உப்பாக மாறியதோடு, சதுப்பு நில காடுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அங்குள்ள பொன்னந்திட்டு கிராமத்தில் இயங்கி வரும 3 இறால் பண்ணைகளில் இருந்து ரசாயன கழிவு நீர், பக்கிங்காம் பாசன கால்வாயிகளில் கலக்கிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறியிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். பாசன கால்வாயில் குளிப்பவர்களுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படுவதோடு, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி இந்த நீரை அருந்து கால்நடைகளும், உடல் ஆரோக்கியமின்றி அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இறால் பண்ணைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பொன்னந்திட்டு கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com