நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா தேரோட்டம் வெகு விமர்சயைாக நடைபெற்று வருகிறது.
தேர் நிலைக்கு வந்த உடன் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள பூஜைகள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நாளை காலை முதல் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 2 மணியளவில் ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடைபெறும். தேர் திருவிழாவை முன்னிட்டு 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
