சிதம்பரம் : சிவகாமசுந்தரி அம்மனுக்கு தங்க பாத கவசம் அணிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு 16 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பாத கவசம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
சிதம்பரம் : சிவகாமசுந்தரி அம்மனுக்கு தங்க பாத கவசம் அணிவிப்பு
Published on

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு 16 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பாத கவசம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பச்சை மற்றும் சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டுள்ள இந்த பாத கவசத்தை, மும்பையை சேர்ந்த சேகர் என்ற பக்தர் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் டிரஸ்டி ராஜசேகர தீட்சதர், கிருபாகர தீட்சதர் மற்றும் பொது தீட்சதர்கள், சிவகாம சுந்தரி அம்மன் சந்நிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, அம்மனுக்கு அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com