ப.சிதம்பரத்தின் ஜாமீன்மனு மீண்டும் தள்ளுபடி

ஐ. என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை,டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ப.சிதம்பரத்தின் ஜாமீன்மனு மீண்டும் தள்ளுபடி
Published on

ஐ. என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை,

டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, ஏற்கனவே, கடந்த 20 ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. ப. சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்குமாறு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின் மீது, வாதப்பிரதிவாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை, தள்ளுபடி செய்து,. டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ப. சிதம்பரம் செல்வாக்கு மிக்க நபர் என்பதால், அவரை விடுதலை செய்தால், சாட்சிகளை கலைத்து, சில ஆதாரங்களை அழித்து விடுவார் என ஜாமீன் மனுவின் மீது வாதாடிய சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com