சிகாகோவில் 10 வது உலகத் தமிழ் மாநாடு - 250 தமிழ் ஆளுமைகள் மாநாட்டில் பங்கேற்பு

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இன்று தொடங்குகிறது.
சிகாகோவில் 10 வது உலகத் தமிழ் மாநாடு - 250 தமிழ் ஆளுமைகள் மாநாட்டில் பங்கேற்பு
Published on
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இன்று தொடங்கும் மாநாடு வருகிற 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், தமிழக அரசு சார்பில் 20 தமிழறிஞர்கள், சு.வெங்கடேசன் உள்பட சுமார் 250 தமிழ் ஆளுமைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் என சுமார் 6 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். 32க்கும் மேற்பட்ட இணைய அமர்வுகள், கீழடி ஆய்வு பற்றி சிறப்பு விவாதம், குறள் தேனீ, தமிழ் தேனீ, சங்கங்களின் சங்கமம், குறும்பட போட்டி, கவியரங்கம், யுவன்சங்கர் ராஜா கச்சேரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதனிடையே, சிகாகோ நகரில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான முழுச் செலவையும் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் ஏற்றுள்ளார். ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கடந்த 2015ஆம் ஆண்டு மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com