த்தம் சொட்ட விஐபி எஸ்காட் வாகனத்தை மறித்து இளைஞர் தகராறு
ரத்தம் சொட்ட விஐபி எஸ்காட் வாகனத்தை மறித்து இளைஞர் தகராறு
சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ வாசலில் மதுபோதையில் இளைஞர் ரத்தம் சொட்ட சொட்ட விஐபி எஸ்காட் (VIP ESCORT )வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அந்த இளைஞரை சமாதானபடுத்தி சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கந்தர் என்ற இளைஞர் சாலையிலேயே மது அருந்தியதால் அவரது செல்போனை போலீசார் வாங்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய செல்போனை கேட்டு தகராறில் ஈடுட்டு பாட்டிலை உடைத்து கழுத்து, நெஞ்சு உளிட்ட பகுதியில் அறுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story
