சென்னை : நூதன முறையில் இருசக்கர வாகனம் திருட்டு...

இளைஞரிடம் இருந்து நூதன முறையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : நூதன முறையில் இருசக்கர வாகனம் திருட்டு...
Published on

இளைஞரிடம் இருந்து நூதன முறையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மணலியை சேர்ந்த தினேஷ் என்பவரை ஏழுகிணறு பகுதியில் சந்தித்த இளம்பெண் ஒருவர் தனது தாய் நோய்வாய்பட்டிருப்பதாகவும் அவரை காண உடனடியாக செல்ல வேண்டும் எனவும் கூறி, இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளார். இதை நம்பிய தினேஷ் அவரது செல்போன் எண்ணை பெற்று கொண்டு, இருசக்கர வாகனத்தை கொடுத்துள்ளார். நீண்ட நேரமாகியும் பெண் திரும்பாத‌ நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ் ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com