மனைவியை நம்பி விட்டு சென்ற பாரீன் கணவனுக்கு பச்சை துரோகம் - மாமியாருக்கு வெட்டு
சென்னை விருகம்பாக்கத்தில், தகாத உறவால் மனைவி, கள்ளக்காதலன் மற்றும் மாமியாரை வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேஷுக்கு மலேசியாவில் வேலை கிடைத்த நிலையில், மனைவி ஈஸ்வரியை விருகம்பாக்கத்தில் உள்ள மாமனார் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். அப்போது ஈஸ்வரிக்கு பரமசிவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜேஷுக்கு தெரியவரவே, மனைவி ஈஸ்வரி கள்ளக்காதலன் பரமசிவன் மற்றும் மாமியார் அன்னக்கொடியை கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது அவர்களும் ராஜேஷை பதிலுக்கு வெட்டியுள்ளனர். இதில் 4 பேரும் காயமடைந்த நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
