#JUSTIN | ஒரே நேரத்தில் சென்னைக்குள் என்ட்ரி கொடுக்கும் மக்கள்..-ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை..
சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - ஸ்தம்பித்த ஜி.எஸ்.டி சாலை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களின் சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து மக்கள் தென் மாவட்டத்தை நோக்கி சென்றனர்
14 ஆம் தேதி செவ்வாய் கிழமை பொகல் பண்டிகை, 15 ஆம் தேதி புதன் கிழமை மாட்டு பொங்கல், 16 ஆம் தேதி வியாழன் கிழமை காணும் பொங்கல், 17 ஆம் தேதி வெள்ளி கிழமை அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என தொடர் ஆறு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆறு நாட்கள் விடுமுறை பொங்கல் பண்டிகையை முடிந்த நிலையில் மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என தென் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர்
இதனால் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
தென் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோ, வேன், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் என பல ஆயிரகணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஒட்டிகள் பொதுமக்கள் அவதி
நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் தாம்பரம் மாநகர காவல்துறையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெல்ராசபுரம், சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, மகேந்திராசிட்டி என மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் தென் மாவத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து வாகனங்கள் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக சென்னை நோக்கி செல்கின்றனர்.