கொரோனா பாதிப்பு என பள்ளி மாணவன் கடிதம் - பெற்றோரையும் மாணவனையும் கண்டித்த பள்ளி நிர்வாகம்

விடுமுறை எடுக்க வேண்டும் என்ற ஆசையில், கொரானா பாதிப்பு உள்ளதாக 8ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு என பள்ளி மாணவன் கடிதம் - பெற்றோரையும் மாணவனையும் கண்டித்த பள்ளி நிர்வாகம்
Published on
சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன், தமக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். இதனை சமூகவலைதளத்தில் பரவவிட்டு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து மாணவன் மற்றும் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் விசாரித்த போது, விளையாட்டுத்தனமாக அந்த கடிதத்தை எழுதியதாகவும் அந்த கடிதத்தை தனது நண்பர்கள் அந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து பெற்றோரையும் மாணவனையும் கண்டித்த பள்ளி நிர்வாகம் மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான சான்றுகளை அளிக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com