சென்னையில் அனைத்து கடைகளுக்கும் 1 வாரம் கெடு - பெயர் பலகையை மாற்றாவிட்டால் உரிமம் ரத்து

x

சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின் படி, கடைகளின் பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், மற்றும் மூன்றாவது மொழி ஆகியவை 5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள கடைகள் 7 நாட்களுக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், இல்லையெனில் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்