ஷவர்மா சாப்பிட்ட20 பேருக்கு அடுத்தடுத்து உடல்நிலை பாதிப்பு - சென்னையில் அதிர்ச்சி
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சவர்மா வாங்கி சாப்பிட்ட 17 வயது சிறுவன் ரோஹித், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே பகுதியில் அருணாச்சலம் தெருவில் உள்ள உணவகம் மீது சிறுவன் அளித்த புகாரின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவகத்தில் ஷவர்மா தயாரிக்க பயன்படுத்தப்படும் சிக்கன் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது
Next Story
