சென்னையே ஆவலோடு எதிர்பார்த்த ரூட்டில் மெட்ரோ - இன்ப அதிர்ச்சி

x

21 கி.மீட்டருக்கு விரியும் சென்னை மெட்ரோ ரயில் சேவை

சென்னை மெட்ரோ வழித்தடத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வழித்தடம் 4-ன் நீட்டிப்பு கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை அமைக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாம்பரம் முதல் வேளச்சேரி வரை சுமார் 21 கி.மீ நீளமுள்ள வழித்தடம் கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இரண்டு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்ட அறிக்கைகள், வழித்தட பாதை அமையும் இடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்