Chennais Amirta | சென்னைஸ் அமிர்தா கிராண்ட் 7 ஸ்போர்ட்ஸ் மீட் நிகழ்ச்சியில் சாதனை
"Chennais Amirta Grand 7 Sports Meet" நிகழ்ச்சியில் மாணவர்கள் சாதனை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற சென்னைஸ் அமிர்தா கிராண்ட் 7 ஸ்போர்ட்ஸ் மீட் விழாவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கே. நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் 5 மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் இணைந்து, தினேஷ் கார்த்திக்கின் ஜெர்சி எண்ணை கவுரவிக்கும் வகையில் CA DK19 (Chennais amirtha loves Dineshkarthik jersey 19) என்ற பிரம்மாண்ட வடிவமைப்பை உருவாக்கினர். இந்த முயற்சி, இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம் பிடித்தது
