"மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே!" - வீட்டு வாசலில் கோலமிட்டு சென்னை பெண்கள் எதிர்ப்பு

x

"மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே!" - வீட்டு வாசலில் கோலமிட்டு சென்னை பெண்கள் எதிர்ப்பு

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னையில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டுள்ளனர். சென்னை அயப்பாக்கம் ஊராட்சியில் பெண்கள் தங்களது வீடுகளில் மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்களை கோலமாக வரைந்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே! உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் கோலங்களில் இடம்பெற்றிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்