மலைவாழ் பட்டியல் பிரிவில் சேர்க்கக் கோரி நரிக்குறவர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னையில் மலைவாழ் பட்டியல் பிரிவில் சேர்க்கக் கோரி நரிக்குறவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலைவாழ் பட்டியல் பிரிவில் சேர்க்கக் கோரி நரிக்குறவர்கள் உண்ணாவிரத போராட்டம்
Published on

மலைவாழ் பட்டியல் பிரிவில் சேர்க்கக் கோரி சென்னையில் நரிக்குறவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த உண்ணாவிரதத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,நரிக்குறவர்களை மலைவாழ் பட்டியலில் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்ட மசோதா இயற்ற வேண்டும் என்றார்.அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com