``சென்னையில் இனி இது கட்டாயம்.. 7 நாள் தான் டைம்'' - வெளியான அதிரடி அறிவிப்பு
அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம் என சென்னை மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏழு நாள் காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் தொடங்கி வைத்த அவர் , ஒவ்வொரு பொதுமக்களும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
Next Story
