"இனி மெட்ரோ கார்டுகள் செல்லாது..?" ஏப்ரலுக்குள்ள இதை மறக்காம செஞ்சுடுங்க.. - முக்கிய அப்டேட்
"இனி மெட்ரோ கார்டுகள் செல்லாது..?" ஏப்ரலுக்குள்ள இதை மறக்காம செஞ்சுடுங்க.. - முக்கிய அப்டேட்
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் மெட்ரோ கார்டுகளுக்கு பதிலாக, சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட்டுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்க, மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
- இந்நிலையில், வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லுபடியாகாது என தகவல் வெளியாகியுள்ளது.
- இதற்கு மாற்றாக, 'சிங்கார சென்னை' அட்டையை பயன்படுத்த பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுறது.
- மெட்ரோ கார்டில் இருக்கும் பேலன்ஸை முழுவதுமாக பயன்படுத்திவிட்டு, கார்டை மீண்டும் மெட்ரோ நிர்வாகத்திடமே கொடுத்து, 50 ரூபாய் டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மெட்ரோ ரயில் நிலைய கவுன்ட்டர்களிலும் இலவசமாக வழங்கப்படும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, புறநகர் ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளிலும் பயணிக்கலாம்.
- ஸ்டேட் பேக் ஆஃப் இந்தியா மூலம் வழங்கப்படும் இந்த கார்டை, ஷாப்பிங் செய்ய, ஹோட்டல் பில்களை செலுத்தவும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
