சென்னையில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வீடு தேடி வந்த பேரிடி
சென்னையில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வீடு தேடி வந்த பேரிடி
சென்னை பூந்தமல்லியில், வங்கியில் கடன் வாங்கி ஜப்தியாக உள்ள வீடுகளை 17 லட்சம் ரூபாய்க்கு குத்தகைவிட்டு மோசடியில் ஈடுபட்ட மருத்துவரை போலீசார் கைது செய்தனர். எம்.ஜி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட்டில் வசித்த சாந்தி புகழேந்தி மற்றும் பிரீத்தாவிடம் மருத்துவர் மணிவண்ணன், குத்தகை பணமாக 17 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்வதாக நோட்டீஸ் ஒட்டியதால் அதிர்ச்சியடைந்த இருவீட்டாரும், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மணிவண்ணனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மகள் ரேஷ்மாவை தேடி வருகின்றனர்.
Next Story
