

சென்னை கந்தன்சாவடி கட்டட விபத்தில் உயிரிழந்த பீகார் மாநில தொழிலாளர் பப்லுவின் குடும்பத்திற்கு, தொழிலாளர் நல வாரியத்திலிருந்து 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.