சென்னையில் 80 பிரபல ஹோட்டல்கள் மீது பாயும் நடவடிக்கை
சென்னையில் உரிய பார்க்கிங் வசதி இல்லாத 80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு, போக்குவரத்துக் காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு ஆணைப்படி உணவகங்களின் இருக்கைகளுக்கு ஏற்றார் போல் வாகன நிறுத்தம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான பார்க்கிங் வசதி இல்லாத உணவகங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு சென்னை போக்குவரத்து போலீசார் கடிதம் அளித்துள்ளனர்.
Next Story
