எதார்த்தமாக தொடங்கிய சண்டை.. போதை ஆசாமி செய்த வெறிச்செயல்.. சென்னையில் பயங்கரம்

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்

என்பவர் பாடி குப்பத்திற்கு சென்ற போது, பல குற்ற

வழக்குகளை எதிர் கொண்டுள்ள ரவுடி மணி என்பவரிடம்

மது போதையில் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ரவுடி மணி,

பட்டா கத்தியால் காளிதாசை ஓட ஓட விரட்டிச் சென்று

வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பித்து ஓடினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்

உடலை மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு

அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்பதாக இரண்டு போலீசார்களை வெட்டிய

வழக்கில் ரவுடி மணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com